இந்திய உணவு சந்தையின் அபார வளர்ச்சி: தமிழகத்தின் உணவு திருவிழா:
இன்று இந்தியா பல துறைகளில் பெறும் வளர்ச்சி அடைந்திருப்பதை உலக நாடுகள் நன்கு உணர்ந்திருப்பது நிதர்சனம். அதில் குறிப்பாக வேளாண் மற்றும் உணவு உற்பத்தி துறையில் உலகின் தரவரிசையில், இந்தியா 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இந்தியாவில் தென் மாநிலமான தமிழ்நாடு பெறும் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி பெருமளவில் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக வாழை, அரிசி, பால், காபி, தேநீர், கோழி, இறைச்சி உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் தரமான உணவு உற்பத்தி திறனை வெளி உலகிற்கு உணர்த்தவும், வர்த்தகரீதியாக இத்துறையில் வளர்ச்சியை ஈட்டவும் உணவு திருவிழா நடைபெறுகிறது.
வைப்ரண்ட் தமிழ்நாடு 2018: வேளாண் மற்றும் உணவு கண்காட்சி /திருவிழா வெளிகொணர்தல். உணவுத்துறை இந்தியாவின் வளர்ச்சி துறையாகும்.
மதுரையில் நடைபெறும் வைப்ரண்ட் தமிழ்நாடு, சர்வதேச உணவுத்திருவிழா மற்றும் கருத்தரங்கின் நோக்கம் தமிழ்நாட்டில் விளைகின்ற/தயாராகும் உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள், இந்தியாவின் பிற மாநிலங்களும் சந்தைப்படுத்தவும் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான கண்காட்சியாக அமைய விருப்பதுதான் .இப்பெருவிழாவில் வேளாண் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், வணிகர்கள் ,தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள், சப்பளையர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள், தங்கள் தொழிலை மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தும் வாய்ப்பை பெருமளவில் பெறுவார்கள். மேலும் இக்கண்காட்சியில் உணவு துறையின் தொழில்நுட்ப பயன்பாடு, புது கண்டுபிடிப்புகள், சவால்கள், வாய்ப்புகள், பேக்கேஜ் தொழில்நுட்பம், உற்பத்தி, செயலாக்கம், பதப்படுத்துதல், சேமிப்பு, சந்தைப்படுத்தல், தரமான பராமரிப்பு மற்றும் பல தலைப்புகள் பற்றியான தகவல்கள் அந்தந்த துறை சார்ந்தவர்களை கொண்டு பரிமாறப்படும்
வைப்ரண்ட் தமிழ்நாடு 2018- வேளாண் மற்றும் உணவு கண்காட்சி பற்றி:
உணவு துறையில் ஈடுபடும் பல்வேறு நாட்டினரும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் பெருந்திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு நம்மவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யவிருக்கும் இக்கண்காட்சியில் நீங்கள் ஸ்டால் அமைப்பது, ஒருங்கிணைப்பாளர்கள் பற்றி, பதிவு முறைகள், கட்டணம் போன்ற அனைத்து தகவல்களையும் ஒரு சேர பெற http:www.vibranttamilnadu.com இணையதளத்திலும் மின்னஞ்சல் வழியாக பெற contact@vibranttamilnadu.com, முகநூல் www.facebook.com/vibranttamilnadu பார்த்து தெரிந்து கொள்ளவும். தொலைபேசி எண்கள் +91 75388-70222, 75388-49222